குடும்ப சுகாதார சேவை அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்.

சுகாதார அமைச்சில்  குடும்பநல சுகாதார சேவை அதிகாரி பதவிக்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குடும்பநல சுகாதார சேவை அதிகாரி பதவிக்கான பாடத்திட்ட பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

2015/2016 அல்லது 2017 ஆம் ஆண்டுகளில்  க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்ற திருமணமாகாத மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

01.02.2021 வரை விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களை 08.01.2021 அரச வர்த்தமானி மற்றும் www.health.gov.lk என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்