இளைஞர்களின் அரசியல் வரவு அதிகரிக்க வேண்டும் பச்சிலைபள்ளி தவிசாளர் சுரேன்…

தமிழ்த் தேசிய அரசியலுக்கு இளைஞர்களின் வரவு அதிகமாக இருக்க வேண்டும் என பச்சிலைபள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி ஜெயந்திநகர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட  துடுப்பாட்ட போட்டியை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்  கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய அரசியலுக்கு இளைஞர்களின் வரவு  குறைவாக காணப்பதுவதாகவும் அவ்வாறு வருபவர்களும் தேசிய கொள்கையில் பற்று கொண்டிருப்பதை விட பதவிகளிலேயே பற்றுள்ளவர்களாகவும் தமது அடுத்த கட்ட பதவிகளை பெற துடிப்பவர்களாகவுமே இருக்கிறார்களே ஒழிய கொள்கைவழி பயணிப்பதை இலக்காக கொண்டிருப்பதில்லை எனவும் குறிப்பிடடதுடன் இந் நிலை மாற்றப்பட வேண்டும் எனவும் இளைஞர்கள் கொள்கைவழி பயணிப்பவர்களாக வளர்க்க பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இங்கு விளையாட்டுக் கழக வீரர்களுக்கான சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.<

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்