குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய வகுப்பறை தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை …

எப்.முபாரக்  2021-01-05
குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய வகுப்பறை தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் இப்பாடசாலை வகுப்பறைத் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக மாடிக்கட்டடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கான கேள்விப் பத்திரமும் கோரப்பட்டது. எனவே, புதிய கட்;டடம் நிர்மாணிப்பதற்காக இங்கிருந்த பழைய கட்டடம் ஒன்று அகற்றப்பட்டது.
இந்நிலையில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் புதிய வேலைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதனால் இப்பாடசாலை வகுப்பறை பற்றாக்குறையினால் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றது. சில வகுப்பறைகள் பாடசாலை எல்லைக்கு அப்பால் நடத்தப் படுகின்ற துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
எனவே, இப்பாடசாலைக்கு அவசியத் தேவையான வகுப்பறை தேவையை நிறைவு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல தோப்பூர் சாஹிரா வித்தியாலயத்தில் திருகோணமலை மாவட்ட செயலகம் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் ஒன்று பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளது. இதனையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.