கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய 3,772 பேர் ஆசிரியர் சேவையில்…

கல்வியல் கல்லூரியில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 3,772 பேரை ஆசிரியர் சேiயில் இணைத்துக்கொள்ளும் சேவை எதிர்வரும் இரண்டு வாரங்களில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலை புதிய தவணைக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நியமனக்கடிதங்கள் கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்களுள் 1,000 பேர் தேசிய பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஏனையோர் மாகாண பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.