மட்டு போதனா வைத்தியசாலைக்கு வரவிருந்த இருதவியல் இயந்திரங்கள் களுத்துறைக்கு மாற்றும் முயற்சி – தடுத்து நிறுத்திய சாணக்கியன் எம்.பி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு இரு வாரங்களில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த செயற்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமத்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் அவர்களினால் இவ் விடயம் சமந்தமாக கையாளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் ஆலோசணை விடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் இரா.சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆகியோர் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ அவர்களை சந்தித்து இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவிற்கு கொண்டுவரப்பட இருந்த உபகரணங்கள் அனைத்தும் முன்னர் தீர்மானித்தபடி மட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென இருவராலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை உடன் கவனித்தில் எடுத்த பிரதமர் சுகாதார அமைச்சர் அவர்களை வரவழைத்து இருதயவியல் பிரிவிற்கான உபகரணங்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சமர்ப்பிக்க வேண்டிய செயற்பாடுகளை உடன் நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மட்டு எம்.பி இரா.சாணக்கியன் அவர்களிடம் தமிழ்ரிவி வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு வைத்தியசாலையிலும் இவ் உபகரணம் இல்லாமையினால் பல வருடங்களாக மக்கள் உரிய நேரத்திற்கு சிகிச்சையின்றி பல சிரமங்களுக்கும் மத்தியில் வெளி மாகாணங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய பல உயிர்களை இழந்துள்ளோம் இப் பிரச்சினை இனி முடிவுக்கு கொண்டுவரப்படுமென்பது குறிப்பிடத்தக்கது. எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல.. செயல் வீரர்கள் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.