வவுனியா நகரில் இரு வர்த்தகக நிலையங்கள் மூடல்: 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

வவுனியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தொற்றுக்குள்ளான பகுதியுடன் தொடர்புடைய இரு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளர், ஊழியர்கள் என 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா, பட்டானிச்சூர்  பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ள நிலையில் வவுனியா நகரப்பகுதி இன்று காலை முடக்கப்பட்டு வர்த்தகர்களிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த சிலர் அப் பகுதி முடக்கப்பட்ட நிலையில் அங்கு செல்லாது வர்த்த நிலையங்களில் பணியாற்றுவதாக கிடைத்த தகவலையடுத்து சுகாதார பிரிவினர் வவுனியா நகரில் விசேட சோதனை நடவடிக்கையையும் முன்னெடுத்தனர். இதன்போது முடக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த  இரு உரிமையாளர்களின் வர்தக நிலையங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டு மூடப்பட்டதுடன், அங்கு கடமையில் இருந்த உரிமையாளர், ஊழியர்கள் என 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.