சமூக வலைதளத்தில் உலாவும் கடிதத்திற்க்கு சாணக்கியனின் பதில்…

சமூக வலைதளத்தில் உலாவும் கடிதத்திற்க்கு சாணக்கியனின் பதில்…

====

தற்போது சமூக வலை தளங்களில்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பாக கடிதமொன்று உலாவுகிறது இது தொடர்பாக அவரிடம் வினவிய போது..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit – Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்) இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் என்னிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனினால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து நானும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆகியோர் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவினை சந்தித்து இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். இதனையடுத்து சுகாதார அமைசருக்கு இது தொடர்பாக பிரதமர் ஆலோசனை வழங்கி இருந்தார் .

தற்போது சமூக வலை தளங்களில் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுறை சந்திரக்காந்தன் டிசம்பர் மாதம் 26 திகதி அனுப்பிய கடிதம் உலா வருகின்றது உண்மையில் கடிதங்கள் எவரும் அனுப்பலாம் நான் நினைக்கிறேன் சுகாதார அமைச்சர் அந்த கடிதத்தை பார்வையிடவில்லை என்பதை தான் அவருடைய கருத்தை பார்க்கும் போது விளங்கியது ஏனென்றால் களுத்துறை மாவட்டத்திற்க்கு இதை கொண்டு செல்லும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது பிரதமர் அவர்கள் அப்படி இல்லாமல் மட்டகள்ளப்பு மாவட்டத்திற்க்கு வழங்கு சொன்னால் தாம் வழங்க தயார் என்பதை அவ் இடத்தில் சுகாதார அமைச்சர் தெரிவித்தார் .

அந்தவகையில் நானும் ஒரு நாடளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அமைச்சர்களுக்கு ஒரு வார்த்திற்கு 10 அல்லது 15 கடிதங்கள் அனுப்புவது வழமை ஆனால் ஒரு கடிதத்தை அனுப்பி இதை சாதிக்க முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது இது ஒரு பாரிய விடயம் அதே நேரத்தில் எங்களை இவ் விடயத்தில் தலையிடுமாறு இருதயவியல் பிரிவினர் கேட்டதற்க்கு இணங்க சம்பந்தன் ஐயா அவர்கள் என்னை இவ் விடயத்தில் கையாளுமாறு கேட்டிருந்தார்கள் என
இவ் விடயம் தொடர்பாக
சாணகியன் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்