திருகோணமலை-கோமரங்கடவெல வாரச்சந்தையின் நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைப்பு!

(பதுர்தீன் சியானா)
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல வாரச்சந்தையின் நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை இன்று (13) மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரளவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 55805000.00 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமியப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்திற்கமைய திருகோணமலை மாவட்ட கிராமிய பொருளாதார அபிவிருத்தி திட்டம் அவசியமான திணைக்களங்களின் ஒத்துழைப்பைப்பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டு உரிய அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்கொள்ளப்படும் என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
கடந்த வாரம் திருகோணமலை மாவட்ட கிராமியப்பொருளாதார அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் குறித்த திட்ட முன்மொழிவு உரிய அமைச்சரிற்கும் அமைச்சின் செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டு தமக்கு வழங்கப்பட்டதானது மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட மிகுந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்ததாக இதன்போது கலந்துகொண்ட அமைச்சர்கள் தெரிவித்ததாகவும் இதன்போது அரசாங்க அதிபர் நினைவுபடுத்தினார்.
அரசாங்கம் கொவிட்டிற்கு மத்தியில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பாக அபிவிருத்தி செயற்பாடுகள்இன மத மொழி வேறுபாடுகளின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் தம்மால் மாவட்டத்தில் உள்ள மூவின மக்களுக்கும் எவ்வித வேறுபாடின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எமது மாவட்டத்தை சகல துறைகளிலும் மேம்பட்ட மாவட்டமாக மாற்றியமைக்க அனைவரும் ஒன்றுபடுமாறும் இதன்போது அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் கோமரங்கடவெல பிரதேச சபை தவிசாளர் சந்தன விஜிதகுமார,நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஜகத் லியனகே, அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்