கிளிநொச்சியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கூட்டுறவாளர்கள் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்படும் உணவு தவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் இயங்கு நிலையில் இருந்த நிர்வாகத்தினைைர இடைநிறுத்தி , புதிய இயக்குனர் சபை உறுப்பினர்கள் 05 பேர்களை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அவர்களினால் நியமனம் செய்தமைக்கு எதிராக சங்க அங்கத்தவர்களால் கடந்த 05.01.2021 ம் திகதி முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பின் 08 ம் நாளில் முழு அளவிலான ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்த வேளையில் திடீரென அங்கத்தவர்கள் இருவர் இவ் ஆர்ப்பாட்டப் பேரணி செய்வதால் பிரயோசனம் இல்லை எனக்கூறி பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அவர்களினால் 04.01.2021 ம் திகதி நியமனம் வழங்கிய நிர்வாக உறுப்பினர்களின் நியமனம் இரத்து செய்தல் . சங்கத்தின் அங்கத்தவர்கள் , பணியாளர்கள் , அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதார நலன்களை கருதி சங்கத்தின் அபிவிருத்திக்கு தற்போதுள்ள இயக்குனர் சபையினை மீளவும் இயங்க வைத்தல் . சங்கத்தின் கிளைக்குழுத் தேர்தல் நடாத்தி பொதுச்சபையின் ஊடாக புதிய இயக்குனர் சபை ஒன்றினை தெரிவு செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

நியாயமான தீர்வு வரும் வரை இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொழிலாளர்கள் தெரிவித்தார்கள் .

எமது தொழிலாளிகளை சில அரசியல் நோக்கத்திற்காக கூட்டுறவு உதவி ஆணையாளர் கீழ்த்தரமான முறையில் நடாத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்கள். அவர்களின் கோரிக்கையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கு மாகாண ஆளுனரின் கவனத்தில் இவ்விடயத்தை கொண்டு சென்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்