வவுனியா-வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

அவருடன் தொடர்புகளை பேணிய சில ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதும் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவருடன் வவுனியாவில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 148 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.