சஜித் அணியுடன் இணைந்தோர் மீண்டும் ஐ.தே.கவுடன் சங்கமம்!
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீள இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்ட இரத்தினபுரி மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நேற்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தலைமையில் இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மீண்டும் ஐ.தே.கவுடன் சங்கமித்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரத்தினபுரி மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை