Online ல் A/L படிக்க லெப்டொப் இல்லையென்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன் – ஷூக்ரா முனவ்வர்

மஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” – இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிகழ்ச்சில் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தற்காலத்தில் ஒன்லைன் மூலமான வகுப்புகள் நடைபெற்று வருவதினால் தான் உயர் தரத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவி என்ற வகையில் ஒன்லைன் பாடங்களில் கலந்து கொள்வதற்கான ஒரு மடிக்கணிணி – லெப்டப் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு தனது தந்தைக்கு வசதியில்லாமையினால் தான் தான் இந்த இலட்சாதிபதி நிகழ்வில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
என்னைப் போல் பல மாணவிகள் தமது கல்வி நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர் கொள்கிறார்கள். ஒன்லைன் வகுப்புகளுக்காக இன்டெர்னெட் மையங்களுக்கு சென்று படிக்கும் பலர் உள்ளனர்.
நான் படித்து பட்டம் பெற்று உலக புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தின் பெண் இயக்குணரான பணியில் அமர்ந்து அந்த நிறுவனத்தை வழி நடத்த வேண்டும் என்பதே எனது ஆசை.
எனது பெற்றோர் முஸ்லிம்களாக இருப்பினும் எனக்கு எனது காரியங்களை செய்வதற்கு பூரண இடம் வழங்கியிருக்கிறார்கள். பெற்றோர் வழங்கும் சுதந்திரத்தை சரியாக வெற்றிக்காக வேண்டி நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.