மன்னாரில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் வவுனியாவில் தகனம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று (21) மதியம் வவுனியா பூந்தோட்டம் மயாத்தில் தகனம் செய்யப்பட்டது
குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி குறித்த நபருக்கு வைத்தியசாலையில் வைத்து பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(19) காலை உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலை தகனம் செய்யும் வசதிகள் மன்னார் மாவட்டத்தில் இன்மையினால் இரண்டு நாட்களின் பின்னர் இன்று (21) பலத்த பாதுகாப்புடன் வவுனியா பூந்தோட்டம் மயானத்திற்கு சடலம் எடுத்து வரப்பட்டு மின்சாரம் மூலம் சடலம் தகனம் செய்யப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை