ஆலையடிவேம்பில் சமுர்த்தி வங்கிகள் மற்றும் வங்கிச்சங்கங்களை கணிணி மயப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம்
(வி.சுகிர்தகுமார்)
சமுர்த்தி வங்கிகள் மற்றும் வங்கிச்சங்கங்களை கணிணி மயப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்திலும் இவ்வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படுவதுடன் இதுவரை கணிணி மயப்படுத்தப்பட்ட 10 இற்கும் மேற்பட்ட வங்கிகளும் வங்கிச்சங்கங்களும் ஒன்லைன் மூலமான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பித்துள்ளது.
இதன் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் முதலாவதாக கொடுக்கல் வாங்கல்களை ஒன்லைன் மூலமாக ஆரம்பித்த ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கிச்சங்கமும் இவ்வேலைத்திட்டத்தில் 6 ஆவது வங்கியாக இணைந்து கொண்ட ஆலையடிவேம்பு தெற்கு வங்கியின் நடவடிக்கைகளும் சம்பிரதாயபூர்வமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் ஓய்வு பெற்ற முகாமைத்துவ பணிப்பாளர் அருந்ததி மகேஸ்வரன் மற்றும் வங்கி முகாமையாளர் கே.அசோக்குமார் பிரசன்னத்துடன் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி, நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா தலைமையக சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் கிராம உத்தியோகத்தர் க.அருள்ராஜா சமுர்த்தி வங்கிச்சங்க கட்டுப்பாட்டு சபை தலைவி ரி.ஆனந்தி வங்கிச்சங்க தலைவி க.ஜெயசுபா உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்; பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மங்கள விளக்கேற்றி வைத்ததுடன் ஒன்லைன் ஊடாக கணக்கு நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்து கணக்கு புத்தகங்களை பயனாளிகளிடம் கையளித்தனர்.
பின்னர் இடம்பெற்ற ஒன்று கூடலில் கலந்து கொண்ட அவர்கள் கணிணி மயப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்கள் சங்கத்தலைவிகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை