வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி பயிர்ச் செய்கையாளர்களுக்கு, நஸ்டஈடு வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக, இறுதிக் கட்ட நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்த 2155 வாழைப் பயிர் செய்கையாளர்களுக்கு சுமார் 25.5 மில்லியன் ரூபாய்களும், 47 பப்பாசிப் பயிர்செய்கையாளர்களுக்கு சுமார் 3 இலட்சம் ரூபாய்களும் விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளது.

கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கோப்பாய், ஊரெழு, அச்சுவேலி உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இருந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்கள் சுமார் 500 ஏக்கர் வரையில் அழிவடைந்திருந்தன.

அப்போது நிலவிய கடுமையான கொறோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் குறித்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று நிலமைகளை அவதானித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்ட அழிவுகளுக்கு அரசாங்கதினால் நஸ்டஈடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்ததுடன், அழிவுகள் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரை அறிவுறுத்தியிருந்துடன் அதுதொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

இருப்பினும், பப்பாசி மற்றும் வாழை தோட்டங்கள் அழிவடைகின்ற போது நஸ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் எவையும் விவசாய அமைச்சிடமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடமோ இல்லாத நிலையில் நஸ்டஈடு வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டிருந்தது.

எனினும், குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், விசேட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக குறித்த அழிவுகளுக்கு நஸ்ட ஈட்டினை வழங்குதவற்கு ஜனாதிபதியினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அமைச்சவை அங்கீகாரமும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது குறித்த நஷ்ட ஈடுகளை வழங்குதவற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற அழிவுகளுக்கான காப்புறுதித் திட்டத்தில் வாழை பயிர்ச் செய்கையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.