வயல் அறுவடை ஆரம்பம் – விளைச்சல் குறைவால் வாழைச்சேனை விவசாயிகள் கவலை!
வாழைச்சேனை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட விவசாய நிலங்களில் தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வரும் நிலையில் விளைச்சல் குறைவாக காணப்படுவதுடன், வெள்ளத்தில் பாதிப்படைந்ததால் நெற்களில் கருப்பு நிறம் காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் விவசாயம் செய்யப்பட்ட பதினையாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ளத்தினாலும், நோயினாலும் பாதிக்கப்பட்ட நிலையில் 3850 ஏக்கர் வயல்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் பல்வேறுபட்ட நோய்கள் மற்றும் பல அழிவுகளில் இருந்து காப்பாற்றப்பட்ட வேளான்மை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.
அறுவடை செய்யப்பட்ட நெற்கள் சிலவற்றில் கருப்பு நிறமாக காணப்படுவதுடன் சில வேளாண்மைகள் நீரில் மூழ்கி காணப்படும் நிலையில் உள்ளதுடன் அதனை அறுவடை செய்யும் போது பாரிய நெல் சேதங்கள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இம்முறை அறுவடையின் போது 20 தொடக்கம் 30 வீதம் வரை விளைச்சல் காணப்படுவதாகவும் அதனால் பாரிய நஸ்டம் ஏற்படுவதாகவும் நெற்களில் கருப்பு நிறம் காணப்படுவதாகவும் அதனை விற்பனை செய்யும் போது அதனை காரணம் காட்டி நெல்லின் விலையை வியாபாரிகள் குறைப்பார்கள் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தினால் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றது நெல் காய்ந்த நிலையில் இருந்தால் அரசாங்கம் நல்ல விலைக்கு வாங்கும் ஆனால் எங்கள் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக வெள்ளத்தில் எங்களது வயல்கள் பாதிப்படைந்ததால் நாங்கள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை