1500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது!
கற்பிட்டி- அம்மாதோட்டம் பிரதேசத்தில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1,500 கிலோ கிராம் நிறையுடைய மஞ்சளுடன், இன்று(07) அதிகாலை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மஞ்சள் தொகை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை