இதன் கீழ் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் கூட்டுறவு சங்கங்களுக்காக 4 சதவீத வட்டியின் கீழ் கடன் வழங்கப்படுவதாக கூட்டுறவு சேவைகள் விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு திணைக்களங்கள் கொண்டுள்ள 382 நெல் களஞ்சியசாலைகளுக்கான 45 ஆயிரம் மெட்ரிக் தொன்னை இம்முறை பெரும்போகத்தில் கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண மேலும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மேலும் மாகாணங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி நிவாரண விலைக்கு சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை