மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான காணியில் 30 வருடங்களுக்கு பின்னர் விவசாயம் செய்யப்பட்டு, அறுவடை

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான காணியில் 30 வருடங்களுக்கு பின்னர் விவசாயம் செய்யப்பட்டு, அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கவனிப்பாரற்ற நிலையில் திருப்பெருந்துறை பகுதியில் இருந்த மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் அறுவடை விழா, இன்று (13) மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் சுஜீவ ஜெயசேகர தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பாரம்பரிய நடைமுறைகளுக்கு அமைவாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு அறுவடை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைச்சாலையின் நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

முதல் கட்டமாக சுமார் 18 ஏக்கர் வயல் நிலத்தில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சிறந்த விளைச்சல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்