பொலிஸாக இருந்திருந்தால் வடக்கில் பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன்- மேர்வின்சில்வா
நான் மாத்திரம் பொலிஸாக இருந்திருந்தால், பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் மேர்வின் சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “பொன்னம்பலம் ராமநாதன் போன்ற தமிழ் கல்விமான்கள் கூட இதே நாட்டில்தான் வாழ்ந்தார்கள்.
அப்படிப்பட்ட இடத்தில் எங்கிருந்தோ வந்து நாடாளுமன்றத்தில் நுழைந்தவர்கள் செய்கின்ற செயற்பாடுகள் எல்லாவற்றுக்கும் தலையாட்ட முடியாது.
அனைவருக்கும் ஒரே நீதி இருக்க வேண்டும். இவ்விடயத்தில் பெரும்பான்மை மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இவ்விடயத்துக்கு எதிராக நாங்களும் போராட்டமொன்றை நடத்துவோம். என்னை யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
அத்துடன் நான் மாத்திரம் பொலிஸாக இருந்திருந்தால், பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன்.
இதேவேளை ராஜபக்ஷக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். தயவு செய்து முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை