ஆரையம்பதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லயன்ஸ் கழகத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு

வெள்ள அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட   மக்களுக்கான  உலர்வுணவு  பொதிகள் வழங்கும் நிகழ்வு  நேற்று  மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது .
2020  ஆம் ஆண்டு  ஏற்பட்ட வெள்ளணர்த்தத்தின் போது அதிகளவில் பாதிக்கப்பட்ட  மட்டக்களப்பு  மாவட்ட   மக்களுக்கு சர்வதேச  லயன்ஸ் கழகத்தின் நிதி அனுசரணையில் உலர்வுணவு  பொதிகள் வழங்கப்பட்டு  வருகின்றன.
அந்தவகையில்  ஆரையம்பதி லயன்ஸ் கழகம்  மற்றும் நூற்றாண்டு நட்சத்திர  லயன்ஸ் கழகம்  ஆகியன இணைந்த ஏற்பாட்டில் மண்முனைப்பற்று பிரதேச  செயலக  பிரிவில் அதிகளவில் பாதிக்கப்பட்ட புதுகுடியிருப்பு தெற்கு மற்றும் வேடர் குடியிருப்பு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த
100 குடும்பங்கள்  தெரிவு  செய்யப்பட்டு சுமார் 1,500/= பெறுமதிவாய்ந்த  உலர்வுணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன .
குறித்த நிகழ்வில் மாவட்ட  ஆளுநர் லயன் கலாநிதி  ரசிக எஸ்.பிரியந்த, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க  அதிபர் வீ.ஜெகதீசன், ஆளுனர் சபை செயலாளர் லயன் ஆனந்தா, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி, மேலதிக ஆளுனர் சபை  செயலாளர் லயன் ஏந்திரி ரஞ்சன், ஆளுனர் சபை பிரதி செயலாளர் லயன் சிறிரங்கா, ஆலோசகர் சபையின் மாகாண ஆலோசகர் லயன் ராஜா, பிராந்திய ஆலோசகர் லயன் முரளி, பிராந்திய தலைவி லயன் கலாநிதி பாரதிஉட்பட  ஆரையம்பதி லயன்ஸ் கழகம், நூற்றாண்டு நட்சத்திர  லயன்ஸ் கழகங்களின்  அங்கத்தவர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.