ஊடகவியலாளர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு
February 15th, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஊடகவியலாளர்களுக்கு இந்த தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன.
இடர் நிலமைகளின் போது தம்முடன் இணைந்து காத்திரமான பங்களிப்பை வழங்கும் ஊடகவியலாளர்களின் சேவையினை கொரோனா வைரஸ் பரவல் நிலமையில் மேலும் வலுப்படுத்தும் முகமாக இந்த தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன என்று இடர் முகாமைத்து நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர், ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை