பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பால்நிலை சமத்துவதற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விழிப்புணர்வு
பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளை குறைக்கும் நோக்கில் சமூக மட்டத்தில் உள்ள மகளிர் மாத சங்கங்களுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் விழிப்புணர்வு வேலைத்திட்டம் பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் பண்டாரிக்குளம், உக்குளாங்குளம் மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளை தடுக்கும் உத்திகள் எனும் தலைப்பில் தெளிவூட்டப்பட்டது. பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை உலகெங்கும் பாரிய அளவிலான பிரச்சினையாகும். உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ, புணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ, பிறவகையிலோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவே உள்ளார். இவ்வாறு தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் தொடர்பிலும் சட்டத்தரணியால் விளமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சட்டத்தரணி விதுசினி, அக்சன் எய்ட் நிறுவனத்தின் முகாமையாளர் ரம்சிகா, ஒருங்கிணைப்பாளர் நிப்ரஸ், நிறுவனத்தின் இணைப்பாளர் உட்பட மகளிர் சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை