சஹ்ரான் முகாமில் இருந்த மேலுமொரு பெண் கைது

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்குத் தலைமைவகித்த சஹ்ரான் ஹாஷிமினால் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட பெண் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை – மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த 2019ற்கு முன் டிசம்பர் 7ஆம் திகதி சஹ்ரான் ஹாஷிமின் பயிற்சி முகாமில் இவர் கலந்துகொண்டிருந்தாகவும், இந்த பட்டறையிலிருந்த மேலும் 06 பெண்களிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்