302,857 பேருக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை 302,857 பேருக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 39,078 பேருக்கு ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 79 ஆயிரத்து 465 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 890 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 73 ஆயிரத்து 456 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, அவர்களில், இன்னும் ஐயாயிரத்து 576 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 433 இல் இருந்து 435 ஆக அதிகரித்துள்ளது
கருத்துக்களேதுமில்லை