கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை அனுமதி அட்டையில் நிலவும் குறைபாடுகளை திருத்தம் செய்ய சந்தர்ப்பம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரிகள், தங்களது பரீட்சை அனுமதி அட்டையில் நிலவும் குறைபாடுகளை திருத்தம் செய்ய பரீட்சைகள் திணைக்களம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து திருத்தம் மேற்கொள்ள முடியும் என, திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தாமாகவும் ஒருவார காலத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.