நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு

தற்பொழுது நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில் சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தை வரையறுக்கும் நிலை ஏற்படும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடனான நீரை விநியோகிக்க கூடிய நிலை ஏற்படும் என்றும்  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனால் முடிந்தவரை  நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தொடர்பாடல் பிரிவின் முகாமையாளர் சரத் சந்ர முத்துபண்டா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

தற்பொழுது கடும் வரட்சியான காலநிலை நிலவுவதை அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நீர்தேக்கங்களில் நீர் குறைந்து வருகின்றது.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமாயின், தொடர்ச்சியாக 24 மணித்தியாலயங்களுக்கு நீரை விநியோப்பதில் நெருக்கடி நிலை ஏற்படும் என்றும் சபையின் தொடர்பாடல் பிரிவின் முகாமையாளர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்