ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நாளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன உரை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

சுவிசர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெறும் கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாடைபெறும். பேரவையின் பிரதான கூட்டத்தொடர் நாளை தொடக்கம் 24 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

130 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் அதனை பாதுகாப்பதற்காக ஒவ்வொரு நாடும் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தெளிவுபடுத்தவுள்ளனர்.

இம்முறை கூட்டத்தொடருக்காக ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் பிரேரணை ஒன்றை சமர்பிப்பதற்கு தயாராகிவருகின்றது. இது நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்பொழுது இந்த பிரேரணை இலங்கையிடம் வழங்கப்படவுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இந்த அறிக்கையின் பதிலறிக்கையை தற்பொழுது சமர்பிப்பதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேவேளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன ஜெனீவா நேரப்படி நாளை மாலை 4.45 மணிக்கு இணையத்தளத்தின் ஊடாக மகாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்