அக்கரைப்பற்று பாலைக்குடாவுக்கான இலங்கை போக்குவரத்து பேரூந்து சேவை ஆரம்பம்

பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு  செயலாளரும்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்நேற்று (22)    உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி கமலராஜன் உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.

பின்னர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக தம்பட்டை பகுதியில் உள்ள   பனை அபிவிருத்தி சபைக்கான வியாபார நிலையத்தை பார்வையிட்டார்.

அங்கு   பனை அபிவிருத்தி சபைக்கான  அம்பாரை மாவட்டப் பணிப்பாளர்   விஜயனின்  வேண்டுகோளிற்கிணங்க தொலைபேசி ஊடாக  சபையின் தவிசாளருடன் உரையாடியதுடன் மேலதிக அபிவிருத்தி, மனிதவலு,கட்டிட வசதிகள்,வாகன,வசதிகள் குறித்து ஆராய்ந்து நிவர்த்தி செய்து கொடுக்கப்பட்டது.   மேலும்  அம்பாரை மாவட்டத்திற்கு ஆறு பனை அபிவிருத்தி நிலையங்கள் இணைப்பு செயலாளரின் வேண்டுகோளிற்கிணங்க வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர பெண்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புவதற்காக  பனைசார்உற்பத்தி பொருட்களின் விற்பனை செயற்பாட்டையும் ஊக்குவிக்கும் முகமாக அவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட முடிவுப்பொருட்களை பார்வையிட்டு ஊக்குவிப்புகளை வழங்கியதுடன் சந்தை வாய்ப்பினை எதிர்காலத்தில்  பெற்று தர ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்முனை பகுதி மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதுடன்  விளையாட்டு கழகங்கள், பாடசாலை அதிபர்கள் ,பிரதமரின் இணைப்பு செயலாளரை  வரவேற்றதுடன் தத்தமது தேவைகளை இணைப்பு செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அத்துடன் மேற்குறித்த பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களின் புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் மக்களின் தேவைகள் மிக விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விசேடமாக வேலைவாய்ப்பு பிரச்சினை எதிர்வரும் எப்ரல் மாதம் அளவில் தீர்த்து வைக்கப்படவுள்ளதாக அவர்  தெரிவித்தார்.

அத்துடன் இப்பகுதிக்கு வருகை  தந்த கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் இணைந்து மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர்  பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு  செயலாளராக நியமனம் பெற்ற இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கொழும்பில் உள்ள அமைச்சர்கள் இந்திய தூதுவர் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர்  இன்று அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் விநாயகபுரம் பாலக்குடா கோமாரி தம்பட்டடை தாண்டியடி அக்கரைப்பற்று கல்முனை   பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்