அமெரிக்க தூதுவர் வவுனியாவிற்கு விஜயம்!
இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலத்தில் மேம்படுத்தப்பட்ட நேர்நிகர் வகுப்பறை ஒன்றை ஆரம்பித்து வைத்தார்.
சர்வதேச அபிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் அமைப்பின் 21ஆயிரம் அமெரிக்கடொலர் மதிப்பில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயம் மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் குறித்த நேர்நிகர் வகுப்பறை அமைக்கப்பட்டது. அதனை உத்தியோக பூர்வமாக இன்றையதினம் அமெரிக்க தூதுவர் ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், பாடசாலையின் அதிபர் திருமதி நந்தபாலன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை