ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ! போராட்ட களத்தில் அரசியல் பிரமுகர்கள்!

கொரோனா தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று பிற்பகல் 02.30 மணியளவில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாஸா கட்டாய தகனத்துக்கு எதிரான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் இதில் தமிழ் முஸ்லிம் நாடளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்