முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கப்பட வேண்டும் ; மனித உரிமைகள் பேரவையில் ஒலித்தது இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பின் குரல்.

கொரோனாவால் உயிரிழக்கும் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நம்புகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் அந்த உரிமையை மதித்து செயற்பட வேண்டும் என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது, அமர்வு நேற்று முன்தினம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதன் போது அமர்வில் உரையாற்றிய இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பின் பொதுச்செயலாளர் கலாநிதி யூசுப் அல் ஒதாமீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா புதைக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்று, இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பின் பொதுச்செயலாளர் கலாநிதி யூசுப் அல் ஒதாமீன் Yousef Al Othaimeen வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்