தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஜய குமார் தெரிவு

தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வி.விஜய குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய உப தவிசாளர் தெரிவானது இன்று (25) பிரதேச சபையின் சபை மண்டபத்தில் வைத்து கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் இடம் பெற்றது. இதில் இருவர் உப தவிசாளராக போட்டியிட்ட நிலையில் எட்டுக்கு எட்டு என்ற விகிதத்தில் உறுப்பினர்களின் நிலை காணப்பட்ட நிலையில் குழுக்கள் நாணய சுழற்சி முறையில் வி. விஜய குமார் அவர்கள் உப தவிசாளராக  தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் ,ஐக்கிய தேசிய கட்சி இருவர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒருவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருவர் என இணைந்து உப தவிசாளர் விஜய குமார் அவர்களுக்கு ஆதரவாக இருந்து சிறுபான்மை கட்சிகளின் மூலமாக உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்தரப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன இணைந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் உபதவிசாளர் போட்டிக்கு ஒருவரை நிறுத்தியது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த உப தவிசாளர் வி.விஜய குமார் சிறுபான்மை கட்சிகளின் ஒற்றுமை ஒன்றினைப்பால் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன் என்றுமே தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையாக இருப்பதை நாம் இதில் கண்டுள்ளோம் சிறுபான்மை இன வெற்றிக்கான ஆரம்பமாக இந்த தம்பலகாமம் பிரதேச சபை கண்டுள்ளது மக்களின் ஒற்றுமை எமது சிறுபான்மை கட்சி உறுப்பினர்களின் ஒற்றுமை என இங்கு சுட்டிக்காட்டத்தக்கது என்காக வாக்களித்த சிறுபான்மை கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதன் தேசிய தலைமைகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.