இலங்கைக்கு எதிரான தீர்மானம் இன்று ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படுகின்றது

இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானம் இன்று ஜெனீவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, எடுத்த தீர்மானமே சமர்ப்பிக்கப்படவுவுள்ளது.

இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 19ம் திகதி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீர்மானத்தின் பிரதி, இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மனித உரிமை ஆணையாளர் மிச்ஷேல் பச்லெட்டினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் உள்வாங்கப்பட்டுள்ள சில விடயங்கள், இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் 193 நாடுகளில், ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் வாக்களிக்க 47 நாடுகள் மாத்திரமே தகுதிபெற்றுள்ளன.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு, இலங்கைக்கு சார்பாக வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா தமக்கு சார்பாக வாக்களிக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்