9 தாய்மார்களால் உரிமை கோரப்பட்ட“சுனாமி குழந்தை 81″என அடையாளப்படுத்தப்பட்ட ஜெயராஸ் அபிராஸ் சாதாரண தர பரீட்சை எழுதினார் !
9 தாய்மார்களால் உரிமை கோரப்பட்டுள்ள “சுனாமி குழந்தை 81″என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஜெயராஸ் அபிராஸ் இன்று தனது சாதாரண தர பரீட்சையில் தோற்றுவதற்கு சென்றுள்ளார்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது பிறந்து 67 நாட்களே ஆன இவர் 18 மணிநேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் தாதியர்களின் கண்காணிப்பில் இருந்த இவர், 9 தாய்மாரினால் உரிமை கோரப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கையின் பின் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனைக்குப் பிறகு அவரது தந்தை அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்பட்டார்
இவர் குறித்த வைத்தியசாலையில் 81ஆவது கட்டிலில் இருந்த காரணத்தினால்தான் சுனாமி 81 என்ற அடையாளம் இவருக்கு சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு களுதாவளையில் உள்ள சுனாமி நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்திய பின் அவர் செட்டிபாலையம் மகா வித்தியாலயம் சென்று பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை