கொரோனா தொற்றில் இருந்து மேலும் 475 பேர் பூரண குணம் !
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 475 பேர் பூரண குணமடைந்து இன்று (01) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 422 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை