பெண்களால் சாதிக்கமுடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் வவுனியா மாவட்டத்தில் சிறந்த பெண் விவசாயி ஜெயந்தி!

21 -ம் நூற்றாண்டில், இலங்கை பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது, விரைவில் இலங்கை தேசம் சிறிய சிங்கப்பூராகி விடும் என இறுமாப்போடு மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தேசத்தின் சரிபாதி மக்களான பெண்கள் சாதிக்கதொடங்கிவிட்டார்கள் முதலில், பெண்கள் தாங்களும் இவ்வுலகில் வாழ்வதற்கு, சாதிப்பதற்கு உரிமையுண்டு என உணரவேண்டும். பெண்கள் முன்னேற்றம் என்பது சவால்கள் நிறைந்த ஒன்றுதான். ஆண்களுக்கு இவ்வுலகில் ஆயிரம் சவால்கள் இருந்தால், பெண்களுக்கு ஆயிரத்துடன் சேர்த்து இன்னொரு சவாலும் உண்டு. அது, ஆண்கள் என்கிற மிக முக்கியமான, பெரிய சவால் இவை எல்லாவற்றையும் தாண்டி இன்று பெண்களால் சாதிக்கமுடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் வவுனியா மாவட்டத்தில் சிறந்த பெண்விவசாயிக் திகழும் ஜெயந்தி.

ஒரு நாட்டின் அபிவிருத்தி,வேலைவாய்ப்பிற்கு முதுகெலும்பாக விளங்குவது விவசாயம்.

உலகில் ஆரம்பம் முதல் இன்று வரை விவசாயம் உலகின் பல்வேறு நாடுகளில் பயிரப்பட்டு வருகிறது.காலம் காலமா விவசாயம் செழித்தோங்கி வந்தது.

சேற்றில் இறங்கி வேலை செய்யும் விவசாயிக்கு ஈடாகாது இதற்க்கு அமைவாக ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய 10 இலட்சம் வீட்டுத் திட்டத் தோட்டத்தை உருவாக்கும் சௌபாக்கியா வீட்டுத் தோட்ட திட்டத்தின் கீழ் கொவிட்-19 விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக்கி செவ்வந்திப் பூ பயிற் செய்கையில் ஈடுபட்டு வருமானத்தைப் பெற்றுள்ள வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தாக்கம் காரணமாக உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ள நிலையில் தற்சார்ப்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ரபஜபக்ஸ ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், கொவிட் 19 இன் தாக்கம் முதன்முதலாக இலங்கையில் ஏற்பட்ட போது வீட்டுத் தோட்டத்தை ஊக்கிவித்து தற்சார்பு பொருளாதார எழுச்சிக்காக ஜனாதிபதியின் சிந்தனையின் கீழ் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஊடாக சௌபாக்கியா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் வெண்டி, கத்தரி, மரவள்ளி, செவ்வந்தி விதைகள் மற்றும் மர நாற்றுக்கள் என்பவற்றைப் பெற்று வவுனியா தவசியாகுளம் பகுதியில் உள்ள தனது ஒரு ஏக்கர் காணியில் அவற்றைப் பயிரிட்டு தற்போது வருமானத்ரைதப் பெற்று வருகின்றார் ஜெயந்தி.

செவ்வந்திப் பூவை பிரதான பயிராகவும், அதற்கிடையில் ஊடு பயிராக வெண்டி, கத்தரி, மரவள்ளி போன்றவற்றையும் நாட்டி அவற்றுக்கு இறைக்கும் நீரின் மூலம் செவ்வந்தியையும் வளர்த்து வருகிறார். மரக்கறியை தமது தேவைக்கு எடுத்துக் கொண்டு மிகுதியை சந்தைக்கு வழங்கும் அதேவேளை, செவ்வந்திப் பூவை வவுனியா மாவட்டத்திற்கும் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனை செய்து வருகின்றார்.

மாத்தனைள முத்துமாரி அம்மன், யாழ்ப்பாணம் சந்திதி மற்றும் நல்லூர் போன்ற ஆலயங்களுக்கும் வவுனியாவில் உள்ள பல ஆலயங்களுக்கும் செவ்வந்திப் பூவை விற்பனை செய்வதுடன் மாலை கட்டுவோருக்கும், திருமணம் மற்றும் பூப்புனித நீராட்டு விழா போன்ற பல்வேறு வைபங்களுக்கும் செவ்வந்திப் பூவை விற்பனை செய்து வருகின்றார்.

ஒரு பூவை 3 ரூபாய் தொடக்கம் 2 ரூபாய் வரை விற்பனை செய்யும் இவர், இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு50 ஆயிரம் வருமானத்தைப் பெறுவதாக குறிப்பிடுகின்றார். அரசாங்கம் உதவிகளை வழங்கும் பட்சத்தில் மேலும் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய முடியும் என நம்பிக்கை வெளிட்டுள்ளார். இவர் சௌபாக்கியா திட்டத்தின் ஊடாக இதனை வழங்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.