காரைதீவு பிரதேச செயலகத்தில் சுகாதார தெளிவூட்டல் செயலமர்வு !

(நூருல் ஹுதா உமர்)

உலக வங்கியின் நிதி உதவியுடன் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றினூடாக காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட நபர்களை கிராம உத்தியோகத்தர்கள் மூலம் பதிவு செய்து அவர்களுக்கான தொற்றா நோய் தொடர்பான பரிசோதனைகளை காரைதீவு பிரதேச வைத்தியசாலையினூடாக மேற்கொள்வதற்கான தெளிவூட்டும் செயலமர்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (02) காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா, காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் என்.அருந்திரன்,  காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எஸ்.பார்த்திபன் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தி.மோகனகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டு  திட்டத்தின் நோக்கம், எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.