கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 64,000 கொவிட் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ்  வழங்கும் கொவிட் தடுப்பூசிகளின் முதற்தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

‘கொவெக்ஸ்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சுக்கு 14 இலட்சம்; ‘எஸ்ட்ரா ஸெனைக்கா’ தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சுகாதார அமைச்சின் செயலாளர், யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு, தடுப்பூசியினை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டுள்ளனர்

கொவிட் வைரஸின் மிகுந்த எச்சரிக்கை நிலவும் பிரதேசங்களில் உள்ள 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசியை ஏற்றுவது சுகாதார அமைச்சின் நோக்கமாகும்.

தடுப்பூசியை ஏற்றும் பணி அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் மே மாத இறுதிப் பகுதிக்கு முன்னர் பல கட்டங்களின் கீழ், குறித்த தடுப்பூசிகளின் முழுத்தொகையையும் இலங்கைக்கு வழங்குவதற்கு யுனிசெப் நிறுவனம் தயாராகவுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.