கறுப்பு ஞாயிறு தினத்தை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஆர்ப்பாட்டம்

கறுப்பு ஞாயிறு தினத்தை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னனெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இணைந்து பௌத்த மதகுருமாரும் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் கறுப்பு ஆடைகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இது கைதேர்ந்த ஒருவரால் திட்டமிடப்பட்ட மனிதப் படுகொலை, இதில் நேரடியாக தொடர்புடையவர்களுக்கும் கடமைகளைத் தவறவிட்டவர்களுக்கும் சட்டம் நீதி வழங்கட்டும்’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற மிகவும் கொடூரமான தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் நேரடி தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள ‘ கறுப்பு ஞாயிறு’ தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருவதோடு, பல இடங்களிலும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.