துணிந்தெழு சஞ்சிகை குழுவிற்கு கத்தார் நாட்டின் இலங்கைக்கான தூதுவரால் பாராட்டு

கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் கெளரவ மபாஸ் மொஹிதீன் அவர்களை ஸ்கை தமிழ் பணிப்பளார் சஞ்சிகை ஆசிரியர் ஜெ.எம்.பாஸித், தூதரக சிரேஷ்ட அதிகாரி ரஷீத் எம். பியாஸ் , ஸ்கை தமிழ்  முகாமையாளரான அஸ்வர் ரிஸ்வி மற்றும் ஸ்கை தமிழ் உதவி முகாமையாளரான நுஸைலா பதுர்தீன் ஆகியோர்கள் சந்தித்தனர். இச் சந்திப்பு நேற்று (08) கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவராலயத்தில் இடம் பெற்றது.
சமூகத்தில் மிக நீண்ட காலமாக வெற்றிகரமான பயணங்களை மேற் கொண்டு தமது வாழ் நாட்களில் சாதனைகளை நிலைநாட்டிய சாதனை நாயகிகளை கௌரவித்து அந்த சாதனை நாயகிகளின் வாழ்க்கை வரலாறுகளை வெளியிடுகின்ற மிகப்பெரும் பணியை இச்சஞ்சிகை செய்ய ஆரம்பித்து இருக்கின்றது.

இது மத்திய கிழக்கு நாடான கட்டாரிலிருந்து இயங்கும் ஸ்கை தமிழ் நிறுவனத்தின் புதிய முயற்சி ‘துணிந்தெழு’ வாராந்த ஒன்லைன் சஞ்சிகை ஆகும்.
அரபு நாடொன்றிலிருந்து இப்படியான ஒரு தமிழ் சஞ்சிகை வெளிவருவது தமிழ் நெஞ்சங்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.