வவுனியாவில் சிவராத்திரி வழிபாட்டில் கலந்து கொள்வோர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை

வவுனியாவில் இடம்பெறும் சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்பவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கையில் சுகாதார பரிசோதர்களும், பொலிசாரும் ஈடுபடுபட்டுள்ளனர் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் – 19 அச்சுறுத்தல் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. வவுனியாவிலும் கடந்த சில நாட்களாக புதிய கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு சுகாதாரப் பிரிவினர் மக்களை கோரியுள்ளதுடன், சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ளும் போது இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் கோரியுள்ளனர்.

குறிப்பாக கைகளை கழுவுதல், முககவசம் அணிதல், உடல் வெப்பம் பரிசோதித்தல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்றவற்றை பின்பற்றுமாறு கோரியுள்ளதுடன், குறித்த நடவடிக்கைகளை கண்காணிக்க ஆலயங்களில் சுகாதார பரிசோதகர்களும், பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாராப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்