செங்கலடி கால்நடை வைத்தியர் அலுவலகத்தினால் மானிய அடிப்படையிலான கோழிக் குஞ்சுகள் விநியோகம்…

கொல்லைப் புற கோழி முட்டை உற்பத்தியினூடாக கிராமிய பண்ணை வருமானத்தை மேம்படுத்தல் எனும் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் 2021ஆம் ஆண்டுக்கான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் Pளுனுபு திட்டத்தினூடாக 50 வீதம் மானிய அடிப்படையில் செங்கலடி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தினால் செங்கலடி பிரதேச செயலகப் பரிவிற்குட்பட்ட பண்ணையாளர்களுக்கு ஒரு மாத கலவன் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

கால்நடை வைத்தியர் எஸ்.ஆர்.அரச்சனா தலைமையில் செங்கலடி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது 1025 ஒரு மாத கலவன் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் இருபது பண்ணையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கொல்லைப் புற கோழி முட்டை உற்பத்தியினூடாக கிராமிய பண்ணை வருமானத்தை மேம்படுத்தல் திட்டத்தின் ஊடாக முதற்கட்டமாக இக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டதோடு, தொடர்ச்சியாகவும் கட்டம் கட்டமாக மானிய அடிப்படையில் கோழிக் குஞ்சுகள் வழங்கப்படவுள்ளது.

மேலும் பண்ணையாளர்கள் தங்களது பிரதேச அரச கால்நடை வைத்தியர் அலுவலகங்களோடு தொடர்பு கொண்டு இத் திட்டத்தின் மூலம் மானிய அடிப்படையில் கோழிக் குஞ்சுகளை பெற்று பயனடைய முடியும் என்று செங்கலடி கால்நடை வைத்தியர் எஸ்.ஆர்.அரச்சனா தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.