அம்பாறை மாவட்டத்தின் கிராமங்களை ஆக்கிரமிக்கும் யானைக்கூட்டம்

 ( பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவுப் பகுதியை தினமும் மாலை யானை கூட்டமொன்று ஆக்கிரமிப்புச் செய்து வருகின்றது.
இன்று (14) திடீரென அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பகுதியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியினூடாக நிந்தவூர் மற்றும் காரைதீவு பகுதியின் வீதியின் மருங்கில் குறித்த யானைகள் உலா வருகின்றன.
சுமார் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 17 க்கும் அதிகமான யானைகள் அப்பகுதியிலுள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி வருகை தந்துள்ளன.
தினமும் அப்பகுதிக்கு வரும் யானைக்கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருவதுடன், இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாகவுள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணமுள்ளனர்.
இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அவ்விடத்தில் அதிகளவாக குவிந்துள்ளனர்.
மேலும், இப்பிரதேசத்தில் தினந்தோறும் வயல்வெளிகளிலுள்ள வைக்கோல்களுக்கு தீ வைப்பதனாலும், காட்டிலுள்ள யானைகள் வெளிவந்த நிலையில், அருகிலுள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.