அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப்புலனாய்வு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இவர், இன்று(16)  மாலை 06 மணியளவில் கொள்ளுபிட்டிய பகுதியில்  கைது  செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்