ஜெனீவா பிரேரணை காரணமாகவே கொரோனா சரீரங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்தது- ரவூப் ஹக்கீம்!

ஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்டமை காரணமாகவே கொரோனா சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சடலங்கள் அற்ற 181 சவப்பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஷிர் அஹமட் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டிருந்தார்.

அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே ரவூப் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் முஸ்லிம் மக்களின் மனங்களை பாரியளவு வருத்தமடைய வைத்துள்ளது.

சர்வதேச தலையீட்டின் காரணமாகவே கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சடலங்களை அடக்கம் செய்வதற்கான உரிமை மீண்டும் கிடைத்ததது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.