காரைதீவில் அதிஸ்டலாப சீட்டுகளை களவாடிய நிந்தவூரை சேர்ந்தவரை மடக்கி பிடித்த கடைக்காரர் ! இதுவரை 95,000 ருபா பெறுமதியான டிக்கட்டுக்கள் களவாடப்பட்டுள்ளது

கடந்தபல நாட்களாக அதிஸ்டலாபச்சீட்டுக்களைத் திருடிவந்த நபரொருவர் நேற்று கையும்மெய்யுமாக
பிடிபட்டுள்ளார்.
இச்சம்பவம் சம்மாந்துறைப்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பிடிப்பட்ட நிந்தவூரைச்சேர்ந்த இளைஞரை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில்
சம்மாந்துறைப்பொலிசில் ஒப்படைத்துள்ளார்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:

அம்பாறை மாவட்டம் காரைதீவுபிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதியில் உள்ள
அதிஸ்டலாபச்சீட்டு விற்பனை நிலையத்தில் தினமும் இத்திருட்டு இடம்பெற்றுவந்திருக்கிறது.
தினமும் குறித்த நபர் வந்து 10டிக்கட்டுக்களுக்கான பணத்தைக்கொடுத்தவிட்டு கூடுதலான
டிக்கட்டுக்களை களவாகக் கொண்டுசென்றிருக்கிறார்.
அவற்றில் பரிசுகிடைத்த டிக்கட்டுக்களை மறுநாள் கொண்டுவந்து மாற்றி பணத்தைப்பெறுவது வழமை.

10டிக்கட் வாங்கிச்செல்பவர் மறுநாள் 25டிக்கட்டுக்களை பணமாக மாற்றிச்செல்வது தொடர்பாக
கேட்டபோது எனது உறவினர்கள் எடுத்த டிக்கட்டுக்ககள அவை என்று கூறி வந்திருக்கிறார்.

கடைக்காரருக்கு சந்தேகம் வரவே நேற்று உசாரானார்.

குறித்த நபர் வந்து 10டிக்கட்டுக்களை கேட்டிருக்கிறார். இவர் சரி எடுங்கள் என்று விட்டு
மறைவாக அவதானித்திருக்கிறார். அவர் 175டிக்கட்டுக்களை அப்படியே எடுத்து உள்ளாடைக்குள்
செருகியிருக்கிறார். உடனே பாய்ந்து பிடித்ததும் குட்டு அம்பலமாகியது. மக்களும்
கூடிவிட்டனர். தவிசாளருக்கு தகவல் பறந்தது. அவரும் பொலிசாருக்கு கூறிவிட்டு
ஸ்தலத்திற்கு வந்துள்ளார்.

அங்கு குறித்த நபரை விசாரித்தபோது பலநாட்கள் செய்துவந்த திருட்டை அவர் ஒப்புக்கொண்டார்.மொத்தமாக இதுவரை 95ஆயிரம் ருபா பெறுமதியான டிக்கட்டக்களை அவர் திருடியிருப்பதாக
கடைக்காரர் முறையிட்டார்.பொலிசாரும் வந்து விசாரித்துவிட்டு தவிசாளிடம் வாகனத்தில்
ஏற்றிக்கொண்டுவருமாறு கூறிவிட்டுச்சென்றார். தவிசாளரும் அவரைக்கொண்டுசென்று ஒப்படைத்தார்.சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.