240 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம், வெத்தலகேனி பகுதியில் நேறறு (2021 மார்ச் 22) மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது 239 கிலோ மற்றும் 850 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற டிப்பர் வண்டியுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத கடத்தல்களைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் யாழ்ப்பாணம், வெத்தலகேனி, அலியாவலய் பகுதியில் நேற்று (மார்ச் 22, 2021) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சாலையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான டிப்பர் வண்டி ஒன்றை சோதனை செய்தனர்.

அப்போது சுமார் 07 பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்டுள்ள 239 கிலோ மற்றும் 850 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா 100 பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் படி கேரள கஞ்சா, டிப்பர் வண்டி மற்றும் அதில் பயணித்த இரண்டு (02) சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

கடற்படை கைப்பற்றிய கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் ரூ .71.9 மில்லியன் என்று நம்பப்படுகிறது.

கொவிட் -19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட, இந்த நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 34 வயதுடைய வெத்தலகேனி, முல்லியன் மற்றும் அலியாவலெய் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கேரள கஞ்சா, டிப்பர் வண்டி மற்றும் சந்தேக நபர்கள் பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.