அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக்க களுவெவ இராஜினாமா!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவேவ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நாலக கலுவேவ தனிப்பட்ட காரணங்களினால் பதவியை இராஜினாமா செய்ததாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

2018 ஆம் ஆண்டு 52 நாள் அரசியல் நெருக்கடி காலகட்டத்தில் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்