மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரனையை நிறைவேற்றிக்கொள்ள பெரும்பான்மையை பெற முடியாமற்போயுள்ளது

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியாமல் போனதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

47 உறுப்பினர்களில் பிரேரணைக்கு ஆதரவாக அவர்களினால் 22 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், 25 வாக்குகளை பெற்முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.

11 பேர்  பிரேரணைக்கு வாக்களித்துள்ளதுடன் மேலும் 14 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன. இலங்கைக்கு எதிராக பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்கு  மேலாதிக்க நாடுகளினால் பெரும்பான்மையை பெறமுடியாமற் போயுள்ளது.பெரும்பாலனவர்கள் இந்த  பிரேரணைக்கு  சார்பாக செயல்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

மனித உரிமைகள் பேரவையில் ,இன்றைய (23.032021) தினம் இலங்கைக்கு எதிரான  பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு முடிவடைந்ததன் பின்னர் அமைச்சர் மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் , இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பிரேரணைக்கு எதிராக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் அமைச்சர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் முழு உலகும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை விடயமான மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கி நிறைவேற்றிவருகிறது.. வல்லரசு என்று கூறிக்கொள்ளும் சில நாடுகள் கூட தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத நிலையில், இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்குடன் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது.  வைரஸ் பரவலிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய இந்த தருணத்தில் , ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை நோக்கம் இந்த கொடுர வைரசு தொற்று பரவலில் இருந்து உலக மக்களை மீட்டெப்பதாக அமைய வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நிலையான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தலைமைத்துவத்துடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதோடு, எவருக்கும் இங்கு கேள்வி எழுப்புவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டிருக்கிறது. அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின், அதுபற்றி விளக்கம் அளிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எல்ரிரிஈ பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட சமாதானத்தை ஜனாதிபதி மேலும் வலுப்படுத்தியுள்ளார். கூட்டத்தொடரின் இடைநடுவில் மனித உரிமைகள் ஆணையாளரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை நிராகரிக்குமாறு இலங்கை உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது. நாடொன்றின் உள்ளக விவகாரத்தில் எந்தவொரு நாட்டிற்கும் தலையிட முடியாது என்றும், ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திற்கு அமைய மாத்திரம் செயற்பட முடியாது என்றும் அவர் கூறினார்.

பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

14 நாடுகள் வாக்களிப்பதிலிருந்து விலகிக் கொண்டிருக்கின்றன. இந்தியா, ஜப்பான், லிபியா, இந்தோனேஷியா, கெபோன், நெமீபியா, முர்த்தானியா, நேபாளம், செனகல், சூடான், டோகோ, பஹ்ரெயின், புர்கினாபாஸோ, கெமறூன் ஆகிய நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தன.

பிரேரணைக்கு ஆதரவாக ஆர்ஜன்டீனா, ஆர்மேனியா, அவுஸ்திரியா, பஹமாஸ், பிரேசில், பல்கேரியா, ஐவரிகோஸ்ட், செக் குடியரசு, டென்மார்க், பிஜி தீவுகள், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிக்கோ, நெதர்லாந்து, போலந்து, கொரியா, உக்ரைன், பிரித்தானியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.இலங்கை 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அமைய, மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அங்கு கருத்து வெளியிட்ட ஜெனீவாவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி வலியுறுத்தியிருந்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.